search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஜி.பி. அலுவலகம்"

    ‘பொன் மாணிக்கவேல் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்’ என்று கூறி சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மனு அளித்தனர். #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகளை பறிமுதல் செய்ததுடன், அதில் தொடர்புடைய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சினை நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது போலீஸ் அதிகாரிகள் அடுக்கடுக்காக புகார்கள் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர். அதன்பின் 4 அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

    பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போடுவதை கண்டித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் ஆகியோரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

    சென்னை டிஜிபி அலுவலகம்

    பின்னர் இந்து அறநிலையத்துறை இணை-ஆணையர் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் என்று கூறி இதுவரை அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன் மாணிக்கவேலால் இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    பொன் மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிலைகடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை. கோவில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel
    சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு போலீசாரின் ‘வாக்கி-டாக்கி’ மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ‘ஈ’ மற்றும் ‘சி’ பிரிவு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 11-ந்தேதி ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘ஈ’ பிரிவு போலீசார், பணி முடிந்து தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்புக்கான கருவிகளை ஒப்படைத்து விட்டு சென்றனர். இதையடுத்து ‘சி’ பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியை ஏற்றனர்.

    அப்போது ‘ஈ’ பிரிவு போலீசார் ஒப்படைத்த பாதுகாப்பு கருவிகளில் ஒரு ‘வாக்கி-டாக்கி’ மாயமாகி இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், இதுபற்றி மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மாயமான ‘வாக்கி-டாக்கி’ டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தொலைந்து போனதா? அல்லது யாராவது அதை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ‘வாக்கி-டாக்கி’யை கடைசியாக பயன் படுத்திய போலீசாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
    ×